ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

image courtesy: #AusOpen twitter

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மைக்கேலிடம் தோல்வியடைந்தார்.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அமெரிக்காவின் மைக்கேல் மோவுடன் மோதினார். இந்த போட்டியில் மைக்கேல் 6-7, (1-7), 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் 9 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story