புரோ கபடி : யு மும்பா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி


புரோ கபடி : யு மும்பா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
x

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் மோதின.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இதனால் ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதியில் 16-15 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் யு மும்பா அணி சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தனர்.இதனால் ஆட்ட நேர முடிவில் 39-32 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது.


Next Story