புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி..!


புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி..!
x

Image Courtesy: @ProKabaddi

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.

புனே,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் 42-40 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் 44-39 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.


Next Story