புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்சை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி..!


புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்சை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு மும்பா அணி 49-41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.


Next Story