புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி..!


புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு மும்பா அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 36-23 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.


Next Story