புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி


புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற போட்டியில் புனேரி பால்டன்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் அணி 46-44 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் புனேரி பால்டன்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.


Next Story