புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
x

இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தியது.இதனால் தமிழ் தலைவாஸ் 52-24 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story