புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
x

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் புனேரி பால்டன்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் 4-வது வெற்றியை பதிவு செய்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் புனேரி பால்டன் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனே அணி 26-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story