புரோ கபடி: ஜெய்ப்பூர் 5-வது வெற்றி


புரோ கபடி: ஜெய்ப்பூர் 5-வது வெற்றி
x

ஜெய்ப்பூர் அணி இந்த சீசனில் பெறும் 5-வது வெற்றி இதுவாகும்.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் பெங்களூரு புல்ஸ் 42-32 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 51-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை துவம்சம் செய்து 5-வது வெற்றியை சொந்தமாக்கியது. இன்னொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 42-38 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது.

இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தாஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story