புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி..!


புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story