புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியானா வெற்றி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியானா வெற்றி
x

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் இருந்து 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

இன்றுடன் லீக் சுற்று முடிகிறது. இதனை தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்று 13-ந்தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹரியானா 61- 38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story