புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!


புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!
x

image courtesy: Dabang Delhi KC twitter

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி அணி யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணி, யு மும்பா அணி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 11-வது போட்டியில் தபாங் டெல்லி அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 53-33 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்திய டெல்லி அணி இரண்டாவது வெற்றியை பெற்றது.


Next Story