புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

இன்று நடைபெற்ற போட்டியில் பாட்னா - பெங்களூரு அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாட்னா - பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தியது.இதனால் பெங்களூரு 57-44 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story