புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டி 'டிரா'


புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டி டிரா
x

இரு அணிகளும் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தின.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தின. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 28 - 28 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது .



Next Story