நார்வே செஸ் குரூப் ஓபன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா..!


நார்வே செஸ் குரூப் ஓபன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார்  பிரக்ஞானந்தா..!
x

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

நார்வே,

நார்வேயில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

மொத்தம் 9 சுற்றில் 6 வெற்றி ,3 டிரா என 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.கடைசி 9வது சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை அவர் எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் .

ஏற்கனவே , மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் போன்ற ஜாம்பவான் வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


Next Story