செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 2வது சுற்றில் என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்... பிரக்ஞானந்தா


செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 2வது சுற்றில் என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்... பிரக்ஞானந்தா
x

Image : International Chess Federation

நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது.

பாகு,

பாகு, 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் , பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர். இந்த நிலையில் இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது .நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார்.

இறுதிச் சுற்று இரு ஆட்டங்களை கொண்டதாகும். 2வது சுற்று போட்டியும் சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும்.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள 2வது சுற்று போட்டி குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில் ,

கடினமான போட்டியாகத்தான் இருக்கும். வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார்; ஓய்வு எடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் நாளை திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன். என தெரிவித்தார்.


Next Story