ஆசிய விளையாட்டு போட்டி: டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா


ஆசிய விளையாட்டு போட்டி: டேபிள் டென்னிஸ் முதல் நிலை  போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 23 Sep 2023 3:00 AM GMT (Updated: 23 Sep 2023 9:08 AM GMT)

ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது

பெய்ஜிங்,

ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 -முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டு தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது. 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


Next Story