இந்திய குத்துச்சண்டை அணியின் இயக்குனர் சான்டியாகோ நிவா திடீர் ராஜினாமா


இந்திய குத்துச்சண்டை அணியின் இயக்குனர்  சான்டியாகோ நிவா திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 7 May 2022 9:51 PM GMT (Updated: 7 May 2022 9:51 PM GMT)

இந்திய குத்துச்சண்டை அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் பொறுப்பில் இருந்து சான்டியாகோ நேற்று திடீரென விலகினார்.

இந்திய குத்துச்சண்டை அணியின் உயர் செயல்திறன் இயக்குனராக 2017-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த சான்டியாகோ நிவாவின் (சுவீடன்) ஒப்பந்தம் கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியுடன் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அவரது ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய குத்துச்சண்டை அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் பொறுப்பில் இருந்து சான்டியாகோ நேற்று திடீரென விலகினார். அவர் ஆஸ்திரேலிய குத்துச்சண்டை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

சான்டியாகோ நிவா கடந்த 5 ஆண்டுகளாக இயக்குனராக இருந்த காலத்தில் இந்தியா சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அதிக அளவில் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றனர். 2019-ம் ஆண்டு உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story