உலக கோப்பை ஹாக்கி : இந்தியா - வேல்ஸ் அணிகள் நாளை மோதல்


உலக கோப்பை ஹாக்கி  :  இந்தியா - வேல்ஸ் அணிகள் நாளை  மோதல்
x
தினத்தந்தி 18 Jan 2023 3:56 PM GMT (Updated: 18 Jan 2023 3:58 PM GMT)

ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

புவனேஷ்வர்,

15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும்.

ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது. இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.


Next Story