உலகக்கோப்பை ஹாக்கி : சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் பேட்டி


உலகக்கோப்பை ஹாக்கி : சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் பேட்டி
x

ஹாக்கி உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மார்க் நோல்ஸ் பேட்டி அளித்துள்ளார் .

2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.

இந்த நிலையில் ஹாக்கி உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மார்க் நோல்ஸ் பேட்டி அளித்துள்ளார் .

இது குறித்து அவர் கூறியதாவது ;

"உண்மையில், உலகின் முதல் 7 அல்லது 8 அணிகளில் ஏதேனும் ஒன்று உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். என் பார்வையில் முதல் இரண்டு இடங்கள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். ஆனால் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அவர்களை மிக மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது, இந்திய ஹாக்கி அணியை சொந்த மண்ணில், ஆர்வமுள்ள ரசிகர்களுக்கு முன்னால் தோற்கடிக்க மிகவும் கடினம்.

"நான் அற்புதமான ரசிகர்களை எதிர்பார்க்கிறேன். நாங்கள் அதிக சத்தத்தை விரும்புகிறோம், மேலும், வீரர்கள் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று பெரிய கூட்டங்களுக்கு முன்னால் விளையாடி மகிழ்வார்கள் என்று நான் நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் .என கூறினார்


Next Story