கேக் வெட்டி கோவிலில் வழிபாடு நடத்திய பின் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க புறப்பட்ட ஆக்கி வீரர்கள்!


கேக் வெட்டி கோவிலில் வழிபாடு நடத்திய பின் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க புறப்பட்ட ஆக்கி வீரர்கள்!
x

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் இதில் பங்கேற்கவுள்ள இந்திய ஆக்கி அணி நேற்று லண்டன் புறப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் புறப்படுவதற்கு முன் இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கான கொண்டாட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றன.

இந்திய ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். அதன்பின் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் விமானம் மூலம் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணியினர், இம்மாதம் 18ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story