ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023; ஆக்கி தொடருக்கான அட்டவணை வெளியீடு


ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023; ஆக்கி தொடருக்கான அட்டவணை வெளியீடு
x

image courtesy;PTI

ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆக்கி தொடருக்கான அட்டவணையை ஆசிய ஆக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. அதில் நடைபெறும் ஆக்கி போட்டி தொடருக்கான அட்டவணையை ஆசிய ஆக்கி கூட்டமைப்பு, சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் ஓப்புதலுடன் இன்று அறிவித்துள்ளது. அனைத்து ஆக்கி போட்டிகளும் ஹாங்சோவ் நகரின் கால்வாய் விளையாட்டு பூங்காவிலுள்ள ஆக்கி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

ஆக்கி போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் ஆக்கி அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல் பெண்கள் ஆக்கி அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதன் 'ஏ' பிரிவில் இந்தியா, தென்கொரியா, மலேசியா, ஹாங்காங், மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஜகஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி விளையாட உள்ளது. அதே வேளையில் பெண்கள் அணி தனது முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் செப்டம்பர் 27ஆம் தேதி விளையாட உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆண்கள் போட்டிக்கான இறுதிப்போட்டி அக்டோபர் மாதம் 6ஆம் தேதியும், பெண்கள் போட்டிக்கான இறுதிப்போட்டி 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்திய ஆண்கள் போட்டிக்கான அட்டவணை:

செப்டம்பர் 24: இந்தியா - உஸ்பெகிஸ்தான்

செப்டம்பர் 26: இந்தியா - சிங்கப்பூர்

செப்டம்பர் 28: ஜப்பான் - இந்தியா

செப்டம்பர் 30: இந்தியா - பாகிஸ்தான்

அக்டோபர் 2: இந்தியா - வங்காளதேசம்

இந்திய பெண்கள் போட்டிக்கான அட்டவணை:

செப்டம்பர் 25: இந்தியா - சிங்கப்பூர்

செப்டம்பர் 29: இந்தியா - மலேசியா

அக்டோபர் 1: இந்தியா - கொரியா

அக்டோபர் 3: இந்தியா - ஹாங்காங்


Next Story