ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா


ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா
x

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

ஹூலுன்பியர்,

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

.இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.இந்நிலையில், இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.


Next Story