ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
x

image courtesy: twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 9 Sep 2024 11:08 AM GMT (Updated: 9 Sep 2024 4:20 PM GMT)

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுக்ஜீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.

ஹூலுன்பியர்,

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங் 2 கோல்களும், அபிஷேக், சஞ்சய் மற்றும் உத்தம் சிங் தலா 1 கோலும் அடித்தனர்.


Next Story