4 நாடுகள் ஆக்கி: ஜெர்மனியுடன் இந்திய அணி இன்று மோதல்


4 நாடுகள் ஆக்கி: ஜெர்மனியுடன் இந்திய அணி இன்று மோதல்
x

Image Courtesy : @TheHockeyIndia twitter

இந்தியா முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

டஸ்செல்டோர்ப்,

இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளை சேர்ந்த ஜூனியர் அணிகள் இடையிலான ஆக்கி தொடர் ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா, ஸ்பெயினுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது.

அந்த அணி வீரர் நிகோலஸ் அல்வாரெஸ் இந்த கோலை போட்டார். 23-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் காரோமினாஸ் அடித்த கோலால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 25-வது நிமிடத்தில் இந்திய வீரர் அமன்தீப் லக்ராவும், 28-வது நிமிடத்தில் ரோகித்தும் கோலடித்து சமநிலையை ஏற்படுத்தினர்.

அதன் பிறகு கோல் மழை பொழிந்த இந்திய அணியில் சுதீப் சிர்மானோ 35-வது நிமிடத்திலும், ரோகித் 45-வது நிமிடத்திலும், பாபி சிங் தமி 53-வது நிமிடத்திலும், சுதீப் சிர்மாகோ 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முடிவில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஜெர்மனியுடன் (இரவு 10.30 மணிக்கு) மோதுகிறது.


Next Story