பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: நார்வே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஜப்பான்...!

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: நார்வே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஜப்பான்...!
x

Image Courtesy: @FIFAWWC

தினத்தந்தி 6 Aug 2023 8:52 AM IST (Updated: 6 Aug 2023 11:12 AM IST)
t-max-icont-min-icon

32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.

மெல்போர்ன்,

32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.

இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்களுக்கு முன்னேறின.

இதில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு நாக் அவுட் ஆட்டத்தில் ஜப்பான் - நார்வே அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

Next Story