ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

தினத்தந்தி 3 Feb 2024 2:33 PM GMT (Updated: 3 Feb 2024 5:05 PM GMT)

இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் சுனில் சேத்ரி ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பஞ்சாப் அணி சார்பில் வில்மர் ஜோர்டான் கில் ஆட்டத்தின் 23-வது நிமிடத்திலும் லூகா 71-வது நிமிடத்திலும் மதிஹ் தலால் 77-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன.


Next Story