ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி ஒடிசா வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி ஒடிசா வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா - ஐதராபாத் அணிகள் மோதின.

புவனேஸ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா - ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒடிசா அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 35 மற்றும் 90+5-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். மோர்டாடா ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story