ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி..!


ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி..!
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கொச்சி,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் கேரளா அணி சார்பில் லூனா ஆட்டத்தின் 42-வது நிமிடத்திலும் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 45-வது நிமிடத்திலும் இவான் ஆட்டத்தின் 52-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கோவா அணி சார்பில் நோவா ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story