ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தியது கோவா


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தியது கோவா
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் கோவா-ஒடிசா அணிகள் மோதின.

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் கோவா-ஒடிசா அணிகள் மோதின.

இந்த போட்டியில் கோவா அணி சார்பில் பிரிசன் ஆட்டத்தின் 74-வது நிமிடத்திலும் நோவா ஆட்டத்தின் 74-வது நிமிடத்திலும் அல்வரோ ஆட்டத்தின் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story