ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்தின் இன்றைய ஆட்டத்தில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., நடப்பு சாம்பியன் ஐதராபாத்துடன் மோதுகிறது.

ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. முந்தைய 2 லீக் ஆட்டங்களில் அந்த அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி அடைந்து இருக்கிறது.

முந்தைய ஆட்டத்தில் ஒடிசாவிடம் தோற்றது. இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story