ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் (90+1 வது நிமிடம்) ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் ஹியூகோ பூமஸ் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story