சென்னையின் எப்.சி அணியில் கானா வீரர் குவமே கரிகாரி சேர்ப்பு..!!


சென்னையின் எப்.சி அணியில் கானா வீரர் குவமே கரிகாரி சேர்ப்பு..!!
x

கோப்புப்படம் 

அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சென்னையின் எப்.சி கவனம் செலுத்தி வருகிறது.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி, அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்த அணி கானா கால்பந்து வீரர் குவமே கரிகாரியை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் தாய்லாந்து லீக்கில் அணிக்காக 29 லீக் ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்து அசத்தியவர். இவர் தனது 11 ஆண்டுகால தொழில்முறை ஆட்ட காலத்தில் 261 ஆட்டங்களில் விளையாடி 84 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story