உலகக்கோப்பை: இப்ராஹிம் சத்ரான் அபார சதம்..! ஆஸ்திரேலியா வெற்றிபெற 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்


உலகக்கோப்பை:  இப்ராஹிம் சத்ரான் அபார சதம்..! ஆஸ்திரேலியா வெற்றிபெற 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
x

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. .இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைந்து விடும் . இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் , இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரஹ்மத் ஷா இப்ராஹிம் சத்ரானுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் . ரஹ்மத் ஷா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . அதிரடி காட்டிய இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடித்தார் .

தொடர்ந்து ஹஷ்மதுல்லா ஷாஹிதி 26 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 22 ரன்கள் , நபி 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய இப்ராஹிம் சத்ரான் சதம் அடித்து அசத்தினார் .

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. இப்ராஹிம் சத்ரான் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது


Next Story