உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு..!


உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி பந்துவீச்சு தேர்வு..!
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 13 Oct 2023 8:12 AM GMT (Updated: 13 Oct 2023 8:17 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

நியூசிலாந்து: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

வங்காளதேசம்; லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்



Next Story