மகளிர் முத்தரப்பு டி20 இறுதி போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி


மகளிர் முத்தரப்பு டி20 இறுதி போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி
x

image courtesy: BCCI Women twitter

தினத்தந்தி 2 Feb 2023 4:06 PM GMT (Updated: 2 Feb 2023 4:14 PM GMT)

மகளிர் முத்தரப்பு டி20 இறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

ஈஸ்ட் லண்டன்,

தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஈஸ்ட் லண்டனில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் டியோல் 46 ரன்களும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story