மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x

image courtesy: ICC

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கயானா,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதனையொட்டி 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தங்களது அணியை அறிவித்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹேலி மேத்யூஸ் தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-

ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஆலியா அலீன், ஷாமிலியா கானல், டியான்ட்ரா டோட்டின், ஷெமைன் கேம்பல்லே, அஷ்மினி முனிசார், அபி பிளெட்சர், ஸ்டாபானி டெய்லர், சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், கியானா ஜோசப், ஜைடா ஜேம்ஸ், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன்


Next Story