பெண்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா


பெண்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
x

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதின .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பெத் மூனி சிறப்பாக ஆடி 54 ரன்கள் எடுத்தார். மெக் லானிங் 46ரன்கள் , ஆஷ்லே கார்ட்னர்31 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஷிகா பாண்டே விக்கெட் , ராதா யாதவ் ,தீப்தி சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 173ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story