மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து


மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி  தொடரை வென்றது இங்கிலாந்து
x

இங்கிலாந்து மகளிர் அணி, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பிரிஸ்டால் ,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில்களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.இதனால் இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து123 ரன்கள் என்ற இலக்கடன் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story