பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த தொடக்க டெஸ்டில் பாகிஸ்தான் அணி 342 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் பாபர் அசாம், 2-வது இன்னிங்சில் அப்துல்லா ஷபிக் ஆகியோரது சதங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முந்தைய டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி ஆயத்தமாகி வருகிறது. ஆல்-ரவுண்டர் மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

அதே சமயம் பாகிஸ்தான் அணியில் கால்முட்டி காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நமன் அலி இறங்குவார் என்று தெரிகிறது. இந்த டெஸ்டிலும் வாகை சூடி தொடரை வெல்லும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது.காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story