கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரானால் என்ன நடக்கும்..? - சஞ்சய் பரத்வாஜ் கருத்து


கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரானால் என்ன நடக்கும்..? - சஞ்சய் பரத்வாஜ் கருத்து
x

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவர் இந்த பதவியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தொடங்கியது.

இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியாகின. இதில் கவுதம் கம்பீர் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில நாட்களில் அவரது நியமனம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரின் சிறு வயது பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் என்ன நடக்கும்? என்பது குறித்து பேசி உள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய மாணவன் ஒருவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறினால் அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அதோடு கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் நிச்சயம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும். ஏனெனில் இந்திய அணிக்குள் இருக்கும் திறமையை அவர் சரியாக வெளிக்கொண்டு வந்து புதிய உத்வேகத்தை அளிப்பார். நம்முடைய இந்திய அணி தற்போது சிறப்பாகவே விளையாடி வருகிறது. முந்தைய தொடர்களை விட தற்போது இந்திய அணியின் பந்துவீச்சும் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. நிச்சயம் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.


Next Story