3 வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி


3 வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி
x

நெதர்லாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

ஆம்ஸ்டர்டாம்,

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 120 ரன்களும், இறுதிவரை களத்தில் இருந்த ப்ரூக்ஸ் 101 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் இழ்க்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது.அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓ'டவுட் 89 ரன்களும்,விக்ரம்ஜித் சிங் 54 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷெர்மான் லீவிஸ் 3 விக்கெட்டும்,அஹெல் ஹோசைன்,ஹெய்டன் வால்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக கைப்பற்றியது.


Next Story