அந்த இந்திய வீரருக்கு எதிரான திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை - ஆப். பயிற்சியாளர்


அந்த இந்திய வீரருக்கு எதிரான திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை - ஆப். பயிற்சியாளர்
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் கூறியதாவது,

கண்டிப்பாக பும்ரா எந்த ஒரு அணிக்கும் முக்கிய பவுலராக இருப்பார். இந்தியாவைப் பொறுத்த வரை அவர் மிகவும் முக்கிய பவுலர். எனவே அவரை நாங்கள் நன்றாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். ஆனால் அவருடைய நம்பர் (3/7) நாங்கள் அவரை சிறப்பாக எதிர்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி நாங்கள் போட்டி துவங்குவதற்கு முன்பே பேசினோம். இருப்பினும் அவருக்கு எதிரான திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ளோம். எங்களுடைய சில ஷாட் செலக்சன் அல்லது முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story