2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி


2023-ம் ஆண்டின்  சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி
x

image courtesy; ICC

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்தது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய அணியை சேர்ந்த வீரர்களான நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வென்றுள்ளார்.

இவர் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். மேலும் கடந்த ஆண்டு 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 72 சராசரியுடன் 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 8 அரை சதங்களும் அடங்கும்.


Next Story