இன்றைய ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்த போட்டியாக இருக்கும் - டாம் லாதம்


இன்றைய ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்த போட்டியாக இருக்கும் - டாம் லாதம்
x

Image Courtesy: @BLACKCAPS via ICC and ICC Cricket World Cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

தர்மசாலா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைப்பெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்த போட்டியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியா அருமையான அணியாகும். நீண்ட காலமாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எங்கு நடந்தாலும் இரு அணிகளுக்கும் இடையிலான எல்லாவிதமான ஆட்டங்களும் விறுவிறுப்பாக இருந்து இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதேபோல் நாங்களும் நன்றாக ஆடி வருகிறோம். எனவே இன்றைய ஆட்டமும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனலாம். நாங்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story