டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்:  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் அணிகள் இன்று மோதல்
x

இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

கவுசிக்காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும்.

அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க திருப்பூர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.


Next Story