டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்


டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
x

image tweeted by @LycaKovaiKings

கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. தொடக்க வீரர்களாக ஸ்ரீதர் ராஜுவும், சுரேஷ் குமாரும் களமிறங்கினர்.

ஸ்ரீதர் ராஜு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சனும் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சுஜித் சந்திரனும் 9 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த முகிலேஷ், சுரேஷ் குமாருடன் இனைந்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். சுரேஷ் குமார் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி விளையாட உள்ளது.


Next Story