டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி


டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி
x

image courtesy; @ACBofficials / @ICC

டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டது.

காபூல்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை, வங்காளதேச அணிகள் அமெரிக்கா புறப்பட்டு சென்றன.

அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டது. இது தொடர்பான புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



Next Story