ஆல்ரவுண்டர் அஸ்வின் ஒரு விஞ்ஞானி -முன்னாள் கிரிக்கெட் வீரேந்தர் சேவாக்


ஆல்ரவுண்டர் அஸ்வின் ஒரு விஞ்ஞானி -முன்னாள் கிரிக்கெட் வீரேந்தர் சேவாக்
x

ஆல்ரவுண்டர் அஸ்வின் ஒரு விஞ்ஞானி என முன்னாள் கிரிக்கெட் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

புதுடெல்லி

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருது அஷ்வினுக்கு அளிக்கப்பட்டது. அவர்6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மொத்தம் 54 ரன்களை எடுத்தார்.

இந்நிலையில் அஸ்வினை சைன்டிஸ்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். அவர்தனது டுவிட்டர் பதிவில், 'இந்த சைன்டிஸ்ட் இந்திய அணியை வெற்றி பெற வைத்து விட்டார். இந்த போட்டோ எனக்கு எப்படியோ கிடைத்தது. அஸ்வின் அற்புதமான இன்னிங்சை விளையாடியுள்ளார். ஷ்ரேயாஸ் உடனான அவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது' என்று கூறியுள்ளார்.




Next Story