பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பெரிய சவாலாக இருக்கும் - கே.எல்.ராகுல்


பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பெரிய சவாலாக இருக்கும் - கே.எல்.ராகுல்
x

இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது, செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. . இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது.. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுகடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம் .எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக போட்டியிடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமான நேரம் மற்றும் பெரும் சவாலாகும்.

கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் கருத்து சொல்வதால் பாதிக்கப்பட மாட்டார்கள். அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது மற்றும் அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்.

நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, ​​​​நான் அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்ம் இல்லாமல் இருப்பதைப் போல உணரவில்லை.என கூறினார்


Next Story